CRIME
“அடப்பாவி மனுஷா..” ‘த்ரிஷ்யம்’ படத்தை பார்த்து கணவன் போட்ட மெகா பிளான்… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் குக்த்லா பகுதியைச் சேர்ந்த லோகேந்திரா என்பவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி சாந்தினியைக் கொடூரமாகக் கொலை செய்து, வீட்டின் பின்புறம் இருந்த தகரக் கொட்டகையில் வைத்து உடலை எரித்துச் சாம்பலாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றத்தை மறைப்பதற்காக, எரித்த சாம்பலை யமுனை நதியில் கரைத்துவிட்டு, தனது மனைவி காணாமல் போய்விட்டார் என்று கூறித் தானே அவளைத் தேடுவது போல நாடகமாடியுள்ளார். இந்த நிலையில், சாந்தினியின் சகோதரர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், லோகேந்திராவின் நாடகத்தைக் கண்டுபிடித்து அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், லோகேந்திரா புகழ்பெற்ற ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தை பலமுறை பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் படத்தில் வரும் கதாநாயகன் போலீஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிப்பது போலவே, தானும் கொலையை மறைத்துச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடலாம் என்று அவர் கணக்கு போட்டுள்ளார். ஆனால், சினிமா பாணியில் அவர் தீட்டிய பக்கா பிளான், நிஜ வாழ்க்கையில் தவிடுபொடியாகி, தான் பின்னிய வலைக்குள் தானே சிக்கிக்கொண்டார். இந்தச் சம்பவம் ஆக்ரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
