“அடக்கொடுமையே… இவங்கெல்லாம் டாக்டரா..? உயிருடன் இருந்த குழந்தையை ‘செத்துட்டான்’னு சொன்ன பயங்கரம்..!” நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கொடுமையே… இவங்கெல்லாம் டாக்டரா..? உயிருடன் இருந்த குழந்தையை ‘செத்துட்டான்’னு சொன்ன பயங்கரம்..!” நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

அசாம் துப்ரி மாவட்டத்தில் உள்ள கௌரிபூரில் இயங்கி வரும் ‘பாப்புலர் நர்சிங் ஹோம்’ தனியார் மருத்துவமனையில் பெரும் மருத்துவ அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு இம்ரான் ஹக் என்ற 5 வயது சிறுவனுக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து சுமார் 9 மணி நேரத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தில் கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தனர். அதிகாரிகளின் முன்னிலையில், நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழு சிறுவனை மீண்டும் பரிசோதித்தது. அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட சிறுவன் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவன் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

சிறுவனை உயிருடன் மீட்டுப் பரிசோதித்த மருத்துவர்கள், அவசர சிகிச்சைகளுக்காகவும் மேல் சிகிச்சைக்காகவும் கௌவாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப் பரிந்துரைத்தனர். உயிருக்குப் போராடும் தன் குழந்தையை எந்தச் சூழ்நிலையில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள் என்றும், மருத்துவமனையின் இந்த அலட்சியத்திற்குக் காரணம் என்ன என்றும் சிறுவனின் பெற்றோர் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in