“எங்களை கோமாளினு சொல்றீங்க… அப்போ SOP எதுக்கு கொண்டு வந்தீர்கள்..?” மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தவெக ராஜ்மோகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களை கோமாளினு சொல்றீங்க… அப்போ SOP எதுக்கு கொண்டு வந்தீர்கள்..?” மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தவெக ராஜ்மோகன்..!!

Published

on

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அதன் தலைமை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தவெக சார்பில் ராஜ்மோகன் தனது எக்ஸ் தளப் பதிவில் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “‘தோல்வித் தலைவர்’ ஸ்டாலின் எங்களைப் பார்த்து ‘கோமாளிகள்’ என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. திமுக தலைமையின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பியுள்ள ராஜ்மோகன், தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு பொருட்டாகவே நீங்கள் மதிக்கவில்லை என்றால், எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொல்லி ஊடகங்களுக்கு ஏன் உத்தரவிட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், “ஊடகங்களுக்குக் கட்டளை இடுவதும், YouTube முகப்புப் படங்களில் கூட கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஏன்? தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு பயந்துபோய் ஊடகங்களுக்கு SOP கொண்டுவந்தது ஏன்?” என்று மு.க.ஸ்டாலினுக்குக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in