LATEST NEWS
இடைத்தேர்தல் களம் திடீர் பரபரப்பு.. தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்.. பரபரப்பில் அரசியல் களம்..!!
தமிழக இடைத்தேர்தலில் அனுமதிக்கப்பட்ட செலவின வரம்பை மீறி கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்துள்ளதாக, தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அமலன் புகார் மனு அளித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளின்படி இடைத்தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் மட்டுமே செலவிட அனுமதி உள்ள நிலையில், தவெக வேட்பாளர்கள் இருவரும் விதிகளுக்குப் புறம்பாகக் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அமலன் அளித்துள்ள அந்தப் புகாரில், தாராபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காகப் பாதுகாப்புப் பேரிகார்டுகள் அமைக்க மட்டுமே விதிகளுக்கு மாறாக ரூ.2.27 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், மதுராந்தகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பேரிகார்டுகள் அமைப்பதற்காக ரூ.1.05 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அதீத செலவினங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முற்றிலும் மீறிய செயல் என்பதால், சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்
