“என்னமா இப்படி பண்றீங்க..” மனைவியை காணோம் என பதறிய கணவன்.. . சிசிடிவியை பார்த்ததும் மயக்கமே வந்துடுச்சு..சுற்றுலா சென்ற இடத்தில் செம ட்விஸ்ட். வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னமா இப்படி பண்றீங்க..” மனைவியை காணோம் என பதறிய கணவன்.. . சிசிடிவியை பார்த்ததும் மயக்கமே வந்துடுச்சு..சுற்றுலா சென்ற இடத்தில் செம ட்விஸ்ட். வைரல் வீடியோ..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த கணவன் ஒருவர், தன் மனைவியுடன் குவாலியர் மிருகக்காட்சிசாலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குச் சென்றதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தன் மனைவியை ஒரு மரத்து நிழலில் நிற்குமாறு கூறிவிட்டு, தனது மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக வெறும் 5 அடி தூரம் மட்டுமே தள்ளிச் சென்றுள்ளார். வண்டியை நிறுத்திவிட்டு சில வினாடிகளிலேயே அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு நின்றிருந்த அவரது மனைவி திடீரெனக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மனைவியின் கைபேசிக்கு அவர் தொடர்பு கொண்டபோதும், அது அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

இதனால் பதற்றமடைந்த அந்த கணவன், உடனடியாக மிருகக்காட்சிசாலையின் நுழைவாயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்துள்ளார். அதில், அவர் வண்டியை நிறுத்தச் சென்ற அந்த வெறும் 26 வினாடிகளுக்குள், அவரது மனைவி அங்குக் தயாராகக் காத்திருந்த அர்மான் என்ற தனது காதலனின் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பி ஓடுவது தெளிவாகப் பதிவாகியிருந்தது. கணவனின் கண்முன்னே, மிகக் குறுகிய நேரத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த விசித்திரமான காதல் ஓட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கணவன் அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய மனைவி மற்றும் அவரது காதலன் அர்மானைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in