CRIME
“அவன் இல்லாம என்னால முடியாது” காலையில் அண்ணன் தற்கொலை.. அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய தங்கை.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!
உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் அதல்ஹாட் காவல் நிலையத்திற்குட்பட்ட ஹாஜிப்பூர் கிராமத்தில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. சேஷநாத் யாதவ் (என்கிற கோலு யாதவ்) அப்பகுதியில் உள்ள அனுமன் கோவில் அருகே உள்ள கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
காலை வேளையில் கிணற்றில் சடலம் தொங்குவதைக் கண்ட கிராம மக்கள், உடனடியாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். தனது சகோதரனின் மரணச் செய்தியைக் கேள்வியுற்ற அவரது சகோதரி அனுஷ்கா யாதவ் கடும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்து, வீட்டின் உள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
உடன் குடும்பத்தினர் அவரை மீட்டு வாரணாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
