CRIME
ஐயோ கொடுமையே.. பள்ளி PTM மீட்டிங்கில் தந்தை செய்த காரியம்… வீட்டிற்கு வந்ததும் 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த அதிரடி விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் இந்திராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனவானி, சமன் காலனியில், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காகத் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த 14 வயது பள்ளி மாணவன் ஒருவன் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமர்பாலி பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த தீபான்ஷு என்ற அந்த மாணவன், அன்று பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்தில்=தந்தை மதிப்பெண்களுக்காகத் திட்டியதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, இரவு 8 மணியளவில் வீட்டில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், இந்திராபுரம் உதவி ஆணையர் சூர்ய பாலி மௌரியா தலைமையிலான போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவனின் தற்கொலைக்கான முதற்கட்ட காரணமாகத் தந்தையின் கண்டிப்பு அறியப்பட்டாலும், இச்சம்பவத்தின் அனைத்து பின்னணிகள் குறித்தும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
