நள்ளிரவில் பயங்கரம்.. வியாபாரிகளுக்கு இடையே வெடித்த மோதல்.. இடையில் சிக்கிய 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் பயங்கரம்.. வியாபாரிகளுக்கு இடையே வெடித்த மோதல்.. இடையில் சிக்கிய 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தின் அமரியா நகரில், ராம்லீலா கமிட்டி கூட்டத்தின் போது இரு தரப்பு குப்தா வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட பழைய கணக்கு வழக்கு தகராறில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் மற்றும் 15 வயது சிறுவன் உட்பட 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவில் அமரியா நகரில் இந்த ராம்லீலா கமிட்டி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பழைய கணக்குகளை முடிப்பது தொடர்பாக இரு தரப்பு வியாபாரிகளுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்த மோதல் முற்றவே, ஒரு தரப்பினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த இரு சகோதரர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.

இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டின் போது அங்கிருந்த 15 வயது சிறுவன் ஒருவனும் தோட்டாக்கள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரே இரவில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த முக்கொலைச் சம்பவம் காரணமாகப் பிலிபித் மாவட்டம் முழுவதும் பயங்கர சலசலப்பும் பரபரப்பும் நிலவி வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகப் பிலிபித் எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in