“அடப்பாவி.. கணவனே போட்டுக் கொடுத்த மாஸ்டர் பிளான்..” 28 வயது பெண் மார்பில் கத்தியைப் பாய்ச்சிய சகோதரன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவி.. கணவனே போட்டுக் கொடுத்த மாஸ்டர் பிளான்..” 28 வயது பெண் மார்பில் கத்தியைப் பாய்ச்சிய சகோதரன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

ஈரானின் கெஷ்ம் தீவில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 28 வயது மரியம் யர்மொஹம்மதி என்ற பெண், கௌரவக் கொலை என்ற பெயரில் அவரது சொந்தச் சகோதரராலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சோகச் சம்பவம் அக்டோபர் 5, 2026 அன்று அரங்கேறியுள்ளது. மனித உரிமை அமைப்புகளான ஹெங்காவ் மற்றும் ஈரான்வயர்வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மரியத்தின் சகோதரர் அவரது கழுத்து, மார்பு மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தியுள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறக்கும் வரை அருகிலேயே நின்றிருந்த சகோதரர், பின்னர் அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்தத் திட்டமிட்ட படுகொலைக்கு மரியத்தின் கணவனே உதவி செய்துள்ளதும், சகோதரர் வீட்டிற்குள் நுழைவதற்காகத் தனது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மரியத்தின் சகோதரர் மற்றும் கணவர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், மருத்துவமனையில் திரண்ட இவர்களது குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்குக் கொலையாளிகள் மீது எந்தப் புகாரும் இல்லை என்றும், மரியத்தின் செயலுக்கு மரணமே மிகக் குறைந்தபட்சத் தண்டனை என்றும் கூறி இந்தக் கைதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய சட்டத்தின்படி, குடும்பத்தின் ஆண் பாதுகாவலரான தந்தை கொலையாளிகளை மன்னித்துவிட்டால் இந்த வழக்கு அத்தோடு முடித்து வைக்கப்படும். லொரெஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இல்லத்தரசியான மரியத்தின் இறுதிச்சடங்கில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட வீடியோ தற்போது பரவி வரும் நிலையில், கௌரவக் கொலை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட இந்த அநீதி சர்வதேச அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in