CRIME
“என்னுடன் வாழ மாட்டியா…?” வீட்டிற்குள் புகுந்து கணவனின் நண்பன் செய்த கொடூர காரியம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
ஹைதராபாத்தின் மோதிநகர் பகுதியில், கணவனின் நண்பனே ஒரு திருமணமான பெண்ணைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் என்பவரின் குடும்பத்தினர், வேலைவாய்ப்பு தேடி ஒரு மாதத்திற்கு முன்புதான் ஹைதராபாத்திற்கு வந்து குடியேறினர். திலீப்பின் உறவினரான அஞ்சலியின் கணவர் சாகர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு குற்ற வழக்கில் சிறையில் உள்ளார். இதன் காரணமாக, சாகரின் நண்பரான அஷ்வின் என்பவருடன் அஞ்சலிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அஷ்வினுடன் இணைந்து வாழ அஞ்சலி மறுத்ததால், ஆத்திரமடைந்த அஷ்வின் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 10 அன்று, பழம் நறுக்கும் கத்தியுடன் அஞ்சலியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அஷ்வின், அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அஞ்சலியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது; தடுக்க முயன்ற அவரது நாத்தனாரும் அஷ்வினால் காயமடைந்தார். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அஞ்சலி, அக்டோபர் 12 அதிகாலை 4:30 மணிக்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 109(1) மற்றும் 329(4)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த சனத்நகர் போலீசார், அஞ்சலியின் மரணத்தைத் தொடர்ந்து அதனைப் பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்காக மாற்றி அஷ்வினைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
