“இனவெறியால் அரங்கேற இருந்த பேரழிவு..” இந்து கோவில் மீது வெறித்தனமான தாக்குதல் முயற்சி..! துப்பாக்கி ‘லாக்’ ஆனதால் நடந்த அதிசயம்… அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனவெறியால் அரங்கேற இருந்த பேரழிவு..” இந்து கோவில் மீது வெறித்தனமான தாக்குதல் முயற்சி..! துப்பாக்கி ‘லாக்’ ஆனதால் நடந்த அதிசயம்… அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பெரும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், அரோரா பகுதியில் உள்ள இந்து கோவில் ஒன்றை இலக்காகக் கொண்டு, அங்கிருந்தவர்களை சுட்டுக் கொல்ல அலக்சாண்ட்ரோஸ் பபோராகிஸ் (19) என்ற வாலிபர் திட்டமிட்டுள்ளார். அவர் தாக்குதல் நடத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டு அது இயங்காமல் போயுள்ளது. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அங்கிருந்த பலரின் உயிர்கள் தப்பின.

துப்பாக்கி பழுதானதால் அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த வாலிபர், தான் இராணுவப் பாணி சீருடை அணிந்திருக்கும் புகைப்படம் மற்றும் தனது தீவிரவாதக் கருத்துக்கள் அடங்கிய 8 பக்க ஆவணத்தை தனது சக ஊழியருக்கு அனுப்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த ஊழியர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்து எச்சரித்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட எஃப்.பி.ஐ மற்றும் உள்ளூர் காவல்துறையினர் அந்த 19 வயது இளைஞரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

விசாரணையில், அந்த வாலிபர் தீவிரவாத மற்றும் இனவெறிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சம்பவத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அங்கிருக்கும் இந்தியச் சமூகத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையின் இந்தத் துரித நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in