CRIME
“அய்யோ கடவுளே.. . திடீரென சூழ்ந்த முகமூடி கும்பல்..” மகனின் கண் முன்பே பாய்ந்த 8 குண்டுகள்.. ஒய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!!
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் ஆரா நகரில், ஓய்வு பெற்ற சுங்கத்துறை உதவி ஆணையர் ஒருவரை அவரது மகனின் கண் முன்பாகவே பைக் கும்பல் ஒன்று கொடூரமாகச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நவாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயின் கல்லூரியின் கிழக்கு வாயில் அருகே வசித்து வந்த 67 வயதான ராம்குமார் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காலை தனது மகன் ராஜேஷ் குமாருடன் வழக்கமான நடைப்பயிற்சிக்காக அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது, பைக் மற்றும் முகமூடி அணிந்து வந்த மூன்று ஆயுதமேந்திய குற்றவாளிகள் அவரை வழிமறித்து சரமாரியாகச் சுட்டுள்ளனர். அவரது உடலில் சுமார் 8 குண்டுகள் பாய்ந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரமான பகல்நேரப் படுகொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போஜ்பூர் எஸ்பி அவதேஷ் தீட்சித் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், நிலத் தகராறு மற்றும் சொத்து தொடர்பான முன்விரோதம் காரணமாகவே இந்தத் திட்டமிட்ட கொலை அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ராம்குமார் சிங்கின் குடும்பத்தினர் குறிப்பிட்ட நபர் மீது புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக ஒருவரைக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். மேலும், தப்பியோடிய மற்ற கொலையாளிகளைப் பிடிப்பதற்காகப் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
