“யாரும் எதிர்பார்க்காத சம்பவம்..! மழைக்காக இப்படியொரு செயலா..?! விவசாயிகளுக்காக தவெகவினர் செய்த நேர்த்திக்கடன்… குவியும் பாராட்டுகள்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரும் எதிர்பார்க்காத சம்பவம்..! மழைக்காக இப்படியொரு செயலா..?! விவசாயிகளுக்காக தவெகவினர் செய்த நேர்த்திக்கடன்… குவியும் பாராட்டுகள்..!!”

Published

on

திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் விவசாயம் பாதிப்படைந்து நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும், ஏரி மற்றும் குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும் வேண்டி அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களுடன் இணைந்து நிர்வாகிகள் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, கோவிலில் திரண்ட பக்தர்கள் மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகிகள் அனைவரும் இணைந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தரையில் உணவு படைத்து மண் சோறு சாப்பிடும் வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றனர். மக்கள் நலனுக்காகவும் மழை பொழிய வேண்டியும் அவர்கள் அனைவரும் இணைந்து இந்த மண் சோறு சாப்பிட்டுத் தீவிரமாகப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Advertisement

சிறப்பு வழிபாடும் மண் சோறு சாப்பிடும் பிரார்த்தனையும் முடிந்த சிறிது நேரத்திலேயே, அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரெனக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். வேண்டி பிரார்த்தனை செய்த உடனேயே மழை பெய்ததால் பக்தர்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in