“காதலுக்கு ஏது வயது..?” 75 வயது தாத்தாவைக் காதலித்து கரம் பிடிக்கும் 30 வயது இளம் பெண்.. நெட்டிசன்களை வாயடைக்க வைத்த வைரல் ஜோடி.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காதலுக்கு ஏது வயது..?” 75 வயது தாத்தாவைக் காதலித்து கரம் பிடிக்கும் 30 வயது இளம் பெண்.. நெட்டிசன்களை வாயடைக்க வைத்த வைரல் ஜோடி.. வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில், 75 வயது முதியவர் ஒருவருக்கும் 30 வயது இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து, விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஔரையா மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிளாக்கரான ராணி ராஜ்புத் என்ற 30 வயதுப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சகார் பகுதியைச் சேர்ந்த 75 வயதான ராம்சுகர் என்பவரது வீட்டிற்கு வீடியோ எடுப்பதற்காகத் தொடர்ந்து சென்று வந்துள்ளார். இந்தத் தொடர் சந்திப்புகளின் விளைவாக இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும், தங்களது காதலை முறைப்படி திருமண பந்தமாக மாற்ற இருவரும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில், இவர்களது நிச்சயதார்த்தம் மற்றும் ஹல்தி, மெஹந்தி போன்ற திருமணச் சடங்குகள் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன. இந்த அரிய காதல் கதையின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே வியப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in