பகலில் பாத்திரம் விற்பது போல நாடகம்… இரவில் மங்கி கேப் அணிந்து கைவரிசை காட்டிய பிரபல திருட்டு கும்பல்.. 2 வருடங்களுக்குப் பிறகு சிக்கிய திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

பகலில் பாத்திரம் விற்பது போல நாடகம்… இரவில் மங்கி கேப் அணிந்து கைவரிசை காட்டிய பிரபல திருட்டு கும்பல்.. 2 வருடங்களுக்குப் பிறகு சிக்கிய திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முள்பாகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2 ஆண்டுகளாகப் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ‘மங்கி கேப்’ திருட்டு கும்பலை காவல்துறையினர் கைது செய்து முறியடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று முக்கியக் குற்றவாளிகளும் தமிழகத்தின் திருப்பத்தூரைச் சேர்ந்த முனிராஜு, சதீஷ் குமார் மற்றும் பெருமாள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.52 லட்சம் மதிப்பிலான 322 கிராம் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்தக் கும்பல் பகல் நேரங்களில் தெருக்களில் பழைய பாத்திரங்களை விற்பனை செய்வது போல நடித்து, பூட்டியிருக்கும் வீடுகளைக் நோட்டமிட்டு வந்துள்ளது. பின்னர் இரவில் மங்கி கேப் அணிந்து, வெறும் கால்களுடன் சத்தமின்றிச் சென்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். முள்பாகல் நகரின் டீச்சர்ஸ் காலனி, சிவகேசவ் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர்கள் நிகழ்த்திய இந்தக் கொடூரச் செயல்கள் சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement

முள்பாகல் உதவி எஸ்பி மனிஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ரகசிய நடவடிக்கை மூலம் இந்தக் கும்பலை வலைவீசிப் பிடித்தது. விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளில் கோலார் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த குறைந்தபட்சம் 10 பெரிய திருட்டுச் சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. மேலும், கர்நாடகாவில் திருடிய பணத்தைக் கொண்டு இவர்கள் தமிழகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஆடம்பர வீடு கட்டி வந்ததும் அம்பலமானது. அந்த வீட்டைப் பறிமுதல் செய்யச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காவல்துறையினர், திருடப்பட்ட பொருட்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in