“அரசு மருத்துவமனையா இல்ல மதுபானக் கடையா..?” ஆபரேஷன் தியேட்டர் கட்டிடத்திற்குள் ஊழியர்கள் செய்த அசிங்கம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அரசு மருத்துவமனையா இல்ல மதுபானக் கடையா..?” ஆபரேஷன் தியேட்டர் கட்டிடத்திற்குள் ஊழியர்கள் செய்த அசிங்கம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

பீகார் மாநிலம் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டிடத்திற்குள் ஊழியர்கள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனையின் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவரும், அங்கு பணிபுரியும் டிராலி தொழிலாளி எனக்கூறப்படும் நபர் அமர்ந்து மது அருந்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. முழு மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில், அதுவும் ஒரு அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஊழியர்கள் இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உடனடியாகத் தங்களது அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். தர்பங்கா பெட்டா காவல் நிலைய போலீசார் இது தொடர்பாக முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஹரி சங்கர் மிஸ்ரா, சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவமனைக்குள் மது பாட்டில்கள் எப்படி வந்தன என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in