CRIME
“எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும்…?” கழிவறைக்குள் கதறிய 21 வயதுப் பெண்… வெளியே நின்று ஆண்கள் செய்த கேவலம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவில் அக்டோபர் 10-ம் தேதி அதிகாலை, சிகாகோ பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஆல்பா எப்சிலான் பை மாணவர் அமைப்பின் இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 21 வயதுப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். விருந்தின்போது காணாமல் போன தனது தோழியைத் தேடிச் சென்ற மியா லாரா, கீழ்தளத்தில் இருந்த ஒரு கழிவறையின் வெளியே சில ஆண்கள் நின்றுகொண்டு, “எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும்?” என்று உள்ளே இருந்த பெண்ணைக் கேலி செய்தபடி கூச்சலிட்டதைக் கவனித்துள்ளார். மியா லாரா கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, அவரது தோழி உடைகள் கலைந்த நிலையில் சுவரில் சாய்ந்து அழுதுகொண்டிருந்ததையும், அங்கிருந்த ஒரு ஆண் அவரது கைகளைக் கட்டிப்போட்டு அத்துமீறியதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை விடுவிக்குமாறு கதறிய அவரது தோழி, அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த ஆணைப் பின்தொடர்ந்து சென்று குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு அந்த நபர், “அவளுக்கு விருப்பம்தான்” என்று கூறிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய நபர் அடையாளம் காணப்பட்டு, அவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி இந்தச் சம்பவம் தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், புகார்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் மாணவர் அமைப்பின் தேசிய நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இத்தாக்குதலில் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் ஈடுபடவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி உதவி கேட்டவுடன் தங்களது அமைப்பின் பொறுப்பாளர்கள் அங்கு சென்று உதவி செய்துவிட்டு, உடனடியாக அந்த விருந்து நிகழ்ச்சியையே நிறுத்தியதாகவும் கூறியுள்ளனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் நடத்தும் விருந்துகளின் பாதுகாப்பு குறித்தும், ஒரு பெண் ஆபத்தில் இருக்கும்போது சுற்றியிருந்த ஆண்கள் கேலி செய்த விதம் குறித்தும் கடுமையான சமூக விவாதங்களை எழுப்பியுள்ளது.
