“பிரிஞ்சவங்க எல்லாரும் ஒன்னா சேரலாம் வாங்க” அதிமுகவை காப்பாத்த வேற வழியில்லை.. சிவி சண்முகத்தின் பரபரப்பு அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பிரிஞ்சவங்க எல்லாரும் ஒன்னா சேரலாம் வாங்க” அதிமுகவை காப்பாத்த வேற வழியில்லை.. சிவி சண்முகத்தின் பரபரப்பு அறிக்கை..!!

Published

on

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கட்சித் தொண்டர்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கித் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட வேளையில், திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதே நேரத்தில், கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை தலைமை அலுவலக நிகழ்ச்சிக்கு வராமல், விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அம்மாவால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம் மீண்டும் வலிமை பெற்று பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து பேசிய சி.வி. சண்முகம், “கடந்த காலத் தவறுகளை மறந்து சசிகலா உள்பட கட்சியை விட்டுப் பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுங்கியிருப்பவர்கள் என அனைவரையும் ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற கொள்கையோடு மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று திறந்தமனதோடு வேண்டுகோள் விடுத்தார். தவறுகள் இரு பக்கமும் நடந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், அனைவரையும் அரவணைத்துச் சென்று பழைய வலுவான அதிமுகவை உருவாக்கினால் மட்டுமே தொண்டர்களுக்கும் மக்களுக்கும் கட்சியின் மீது முழுமையான நம்பிக்கை பிறக்கும் என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in