LATEST NEWS
மக்களே மறக்காம போங்க..! தமிழகம் முழுவதும் இன்று ‘ஞாயிறு’ என்றாலும் ரேஷன் கடைகள் இயங்கும்.. அரசு அதிரடி உத்தரவு..!!
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல இயங்கும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நாளை மற்றும் அதற்கு அடுத்த நாட்களான அக்டோபர் 19 (ஆயுத பூஜை) மற்றும் அக்டோபர் 20 (சரஸ்வதி பூஜை) ஆகிய தேதிகளில் தொடர் அரசு விடுமுறை வருகிறது. இதனால், பண்டிகை காலத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் எவ்வித சிரமமும் தங்குதடையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படுவதற்குப் பதிலாக, அரசு ஊழியர்களுக்கு ஈடுசெய்யும் விடுமுறையாக வருகிற நவம்பர் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் உணவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்கு முன்னதாகவே தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ள இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
