CINEMA
“ரஜினி கொடுத்த தங்கச் சங்கிலி… பெருமையுடன் தேவா சொன்ன அந்த கடைசி வார்த்தை… கலங்க வைக்கும் உண்மை சம்பவம்..!!
தமிழ் திரைப்பட இசையுலகின் ‘தேனிசைத் தென்றல்’ என்று போற்றப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா காலமான செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1980 மற்றும் 1990-களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலகட்டத்தில், தனது தனித்துவமான கானா பாடல்களாலும் துள்ளலான இசையாலும் தமிழ் இளைஞர்களைக் கவர்ந்தவர் தேவா. ‘வைகாசி பிறந்தாச்சு’ படத்தின் மூலம் வெற்றியின் முகத்தைக் கண்ட இவர், ஒரே ஆண்டில் 36 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாமலை’ படத்தின் மாபெரும் வெற்றி தேவாவின் இசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற “ஒரு பெண் புறா” பாடல் ரஜினிக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியதுடன், அதைத் தொடர்ந்து ரஜினிக்காக ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார். அண்ணாமலை படத்தின் வெற்றி விழாவின் போது, ரஜினிகாந்த் தனது கையால் ராகவேந்திரர் டாலர் பதித்த தங்க சங்கிலியைத் தேவாவுக்குப் பரிசாக வழங்கினார்; தன் வாழ்நாள் முழுவதும் இந்தச் சங்கிலியைப் பெருமையுடன் அணிந்திருப்பதை தேவா அடிக்கடி கூறி மகிழ்ந்தவர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த தேவாவை, மருத்துவராகிய அவரது மகள் சிபிஆர் சிகிச்சை அளித்து வடபழனி சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி காலை 11 மணி அளவில் தேவா காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்ததும், திநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தேவாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் இடப்பட்டு, எப்போதும் அவர் கையில் வைத்திருக்கும் வெள்ளை கைக்குட்டியும், ரஜினிகாந்த் பரிசாக அளித்த அந்தத் தங்க சங்கிலியும் அவரது உடலுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
