அடக்கொடுமையே..! 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகள் மரணம்.. சி-செக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பின் நேர்ந்த துயரம்.. கதறும் குடும்பத்தினர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே..! 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகள் மரணம்.. சி-செக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பின் நேர்ந்த துயரம்.. கதறும் குடும்பத்தினர்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நியூ மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சி-செக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்குப் பிந்தைய சிக்கல்கள் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்கள் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மற்றொரு பெண்ணும் சி-செக்ஷன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்திருந்த நிலையில், தற்போது மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தத் தொடர் உயிரிழப்புகள் காரணமாக மருத்துவமனையின் சிகிச்சைப் பணிகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும், மருத்துவர்களின் செயல்பாடு குறித்தும் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தீவிரக் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த பெண்ணின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் மற்றும் முறையான விசாரனைக்குப் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணங்கள் முழுமையாகத் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in