CINEMA
நடிகர் ராகவா லாரன்ஸின் மெகா அறிவிப்பு.. அக்டோபர் 29-ல் பெண்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!!
திரைப்பட நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு இலவசமாகப் பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் லாரன்ஸ் தொண்டு நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இந்த மனிதாபிமான உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக 5,000 பட்டுப்புடவைகளைத் தனது பிறந்தநாளான வரும் அக்டோபர் 29-ஆம் தேதி கிராமப்புறப் பெண்களுக்கு வழங்க உள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மக்களின் கஷ்ட காலத்தில் எப்போதும் ஓடோடி உதவும் ராகவா லாரன்ஸ், தனது இந்த புதிய முயற்சிக்கு ஒட்டுமொத்த பொதுமக்களின் ஆசியையும், ஆதரவையும் கேட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், ஏழைப் பெண்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண திட்டமிட்டுள்ள அவரது இந்தச் செயலுக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
