LATEST NEWS
“ஒதுங்கியிருந்த சீனியர்களுக்கு ஸ்கெட்ச்.. ஆனா ‘அந்த’ முக்கிய பெயர் காலி..” எடப்பாடி பழனிசாமி போட்ட அதிரடி ஸ்கெட்ச்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் அக்டோபர் 17, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முக்கியக் கொண்டாட்டப் பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, நத்தம் ஆர். விஸ்வநாதன் மற்றும் கே.பி. அன்பழகன் ஆகிய மூத்த தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பெயர் இந்த முக்கியப் பொறுப்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை மீண்டும் கட்சிப் பணிகளுக்குள் தீவிரமாகக் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதை இந்த அறிவிப்பு காட்டுகிறது. இதன் மூலம் உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முந்தைய செல்வாக்கு மிக்க அமைச்சர்களை இபிஎஸ் மீண்டும் முன்னிலைப்படுத்தி வருகிறார். கட்சியின் ஆண்டு விழாவை ஒரு மாபெரும் அரசியல் பலப்பரீட்சையாக மாற்றவும், தொண்டர்களைத் தேர்தல் பணிகளுக்குத் தயார்படுத்தவும் அதிமுக தலைமை இந்த அதிரடி உத்தியைக் கையாண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
