இது தமிழக வெற்றிக் கழகமா..? அல்லது DRUGS வெற்றிக் கழகமா..? திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் காட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது தமிழக வெற்றிக் கழகமா..? அல்லது DRUGS வெற்றிக் கழகமா..? திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் காட்டம்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறி, திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி கைதான தவெக நிர்வாகிகளின் பெயர்களைப் பட்டியலிட்ட அவர், “இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது DRUGS வெற்றிக் கழகமா?” என்று மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக கட்சியை “TVK-வா? DVK-வா?” எனச் சாடியுள்ள அவர், அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் பின்னணி குறித்துப் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகளில் தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எழுப்பப்பட்டுள்ள இந்தக் கேள்வி, தற்போதைய அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in