“அடப்பாவி.. போலீசுடன் சேர்ந்து குற்றவாளியைத் தேடிய சைக்கோ..” 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்.. கடைசியில் போலீசுக்கு காத்திருந்த மெகா அதிர்ச்சி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவி.. போலீசுடன் சேர்ந்து குற்றவாளியைத் தேடிய சைக்கோ..” 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்.. கடைசியில் போலீசுக்கு காத்திருந்த மெகா அதிர்ச்சி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கலைச்செல்வி கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபரால் தலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் இருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மூதாட்டி சடலமாகக் கிடப்பது குறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசார் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்த வேளையில், அப்பகுதியைச் சேர்ந்தவரும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தற்காலிக ஊழியருமான அறிவுமணி (28) என்பவர், போலீசாருடன் சேர்ந்து கொண்டு குற்றவாளியைத் தேடுவது போலவும், அவர்களுக்கு உதவுவது போலவும் நாடகமாடியுள்ளார். எனினும், அறிவுமணியின் பதற்றமான நடவடிக்கைகள் மற்றும் முன்னுக்குப்பின் முரணான பேச்சுகள் மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரைத் தனியாக அழைத்துச் சென்று போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் முடிவில், அவரே மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அறிவுமணியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட அறிவுமணியிடம் நடத்தப்பட்ட மேல் விசாரணையில், அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது அம்பலமானது. ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடுமையான கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார். கடனை அடைக்க வழி தெரியாமல் தவித்த அறிவுமணி, தனியாக வசித்து வந்த மூதாட்டி கலைச்செல்வியைக் கொலை செய்து அவரது நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். இதையடுத்து, அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைப் போலீசார் பத்திரமாகப் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மி மோகத்தால் அரங்கேறிய இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in