“ஒன்றாக அமர்ந்து மது அருந்திய தம்பதி.. ஆனால் கிளைமாக்ஸில் அரங்கேறிய கொடூரம்..” ஆட்டுக் கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி… நடந்தது என்ன..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒன்றாக அமர்ந்து மது அருந்திய தம்பதி.. ஆனால் கிளைமாக்ஸில் அரங்கேறிய கொடூரம்..” ஆட்டுக் கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி… நடந்தது என்ன..? குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக அடக்கம் செய்ய முயன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சித்தோடு காவல் எல்லைக்கு உட்பட்ட நசியனூர் காரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி நாகராஜ் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (38). கடந்த அக்டோபர் ஆயுத பூஜை நன்னாள் முன்தினம் இரவு நாகராஜும் ராஜேஸ்வரியும் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாகராஜ் ராஜேஸ்வரியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி வீட்டின் அருகேயுள்ள ஆட்டுக் கொட்டகையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்கொலையை வெளியில் தெரியாமல் மறைக்க நாகராஜ் தனது குடும்பத்தினருடன் இணைந்து உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதுகுறித்த இரகசியத் தகவல் சித்தோடு போலீசாருக்குக் கிடைத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்வுக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்த போலீசார், இது தொடர்பாகக் கொலை வழக்குப்பதிவு செய்து நாகராஜைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்தக் கொடூரச் சம்பவத்தில் நாகராஜுடன் சேர்ந்து உடலை மறைக்க முயன்றது மற்றும் தாக்குதல் நடத்தியதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, இக்கொலையில் மேலும் இருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆயுத பூஜை கொண்டாட்டங்களுக்கு முன்தினம் தறிப்பட்டறை பெண் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டு உடலை மறைக்க முயன்ற இச்சம்பவம் ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in