“அம்மா என்னை எப்படியாவது காப்பாத்துங்க” ரெட் லைட் ஏரியாவிலிருந்து தாய்க்கு வந்த போன் கால்.. காதலனுடன் ஓடிய பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா என்னை எப்படியாவது காப்பாத்துங்க” ரெட் லைட் ஏரியாவிலிருந்து தாய்க்கு வந்த போன் கால்.. காதலனுடன் ஓடிய பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்..!!

Published

on

பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகியுள்ளார். காதல் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்தப் பெண்ணை அவரது காதலன் கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற சில நாட்களிலேயே, அந்தப் பெண் தனது தாயாருக்கு ரகசியமாகத் போன் செய்து, “அம்மா என்னை எப்படியாவது காப்பாத்துங்க… என்னை வித்துட்டாங்க” என்று அலறியபடி கூறிவிட்டு உடனடியாக இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட மோதிஹாரி போலீஸார், அந்தப் பெண் பேசிய மொபைல் எண்ணின் டவர் லொகேஷன் தரவுகளைக் கொண்டு தீவிரமாகத் தேடத் தொடங்கினர். அதன் அடிப்படையில், அந்தப் பெண் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ரெட் லைட் (சிவப்பு விளக்கு) பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பீகார் போலீஸார் மேற்கு வங்க உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் அங்கு விரைந்து அதிரடி சோதனை நடத்தி, கடத்தப்பட்ட பெண்ணைப் பத்திரமாக மீட்டதோடு, அவரை ரூ. 2.30 லட்சத்திற்கு விலைக்கு விற்ற காதலன் ரோஹித் குமாரையும் கைது செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in