“ஊழியர்கள் எல்லாம் எங்கே போனார்கள்..?” நடக்கவே முடியாத வயதில் ஸ்ட்ரெச்சரை தள்ளிய பாட்டி.. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஊழியர்கள் எல்லாம் எங்கே போனார்கள்..?” நடக்கவே முடியாத வயதில் ஸ்ட்ரெச்சரை தள்ளிய பாட்டி.. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே, ஒழுங்காக நடக்கக் கூட முடியாத ஒரு முதிய பெண்மணி, மற்றொரு முதிய நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற அவலக் காட்சி ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. போதிய மருத்துவமனை ஊழியர்களோ அல்லது உதவியாளர்களோ இல்லாததால், தனது சொந்த உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் அந்தப் பாட்டி, மற்றொரு முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தள்ளிக் கொண்டு சிரமப்பட்டுச் சென்றுள்ளார்.

அரசு மருத்துவமனையின் இந்த மோசமான உள்கட்டமைப்பு மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தைக் காட்டும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தையும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி, நோயாளிகளுக்கு உதவ வேண்டிய ஊழியர்களின் பற்றாக்குறைக்குக் காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in