LATEST NEWS
அடக்கடவுளே..! “சாதியால் ஒதுக்கிய சக மாணவர்கள்..” விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை..! கதறும் பெற்றோர்..!!
கோவையில் பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மூணாறில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா தேவி அப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது 16 வயது மகன் அகிலன், பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
ஆயுத பூஜை விடுமுறை முடிந்து அகிலன் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அவரது தாயார் கவுசல்யாவும் வேலைக்கு சென்ற நிலையில், மதியம் 1 மணிக்கு சாப்பிடுவதற்காக வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவர் அகிலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதனைப் பார்த்து கதறி அழுத தாயார் அளித்த தகவலின் பேரில், பீளமேடு போலீசார் விரைந்து வந்து அகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் ஸ்காலர்ஷிப் பெறும்போது சாதியை பற்றி தெரிந்து கொண்ட சக மாணவர்கள் தனது மகனைப் பேசாமல் ஒதுக்கி வைத்ததால் ஏற்பட்ட வேதனையில் அவன் தற்கொலை செய்துகொண்டதாக தாயார் கவுசல்யாதேவி புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
