“என் ஆத்மா யாரையும் சும்மாவே விடாது” நான் செத்தாலும் என் தம்பி உடலில் இருப்பேன்… தற்கொலைக்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் ஆத்மா யாரையும் சும்மாவே விடாது” நான் செத்தாலும் என் தம்பி உடலில் இருப்பேன்… தற்கொலைக்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோ..!!

Published

on

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து (30) என்ற வாலிபர், தங்களின் குடும்ப நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் இறப்பதற்கு முன்பாக அவர் பேசிய உருக்கமான வீடியோ மற்றும் 2 பக்க கடிதம் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், தங்களின் நிலத்தை ஏமாற்றி விற்றவர்கள் மீது முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடுவாஞ்சேரியில் உள்ள தங்களது நிலத்தை அண்ணாநகரைச் சேர்ந்த ஒருவரிடம் வைரமுத்துவின் தந்தை ரூ.50 ஆயிரம் கடனுக்காக அடகு வைத்ததாகவும், கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் பத்திரத்தைத் தராமல் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த வீடியோவில் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். “நீங்கள் சும்மா விட்டாலும், எனது ஆத்மா நில மோசடியில் சம்பந்தப்பட்ட யாரையும் சும்மா விடாது” என்றும் அவர் அதில் மிக ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், தனது தம்பியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள வைரமுத்து, தான் இறந்த பிறகு தனது 2 சிறுநீரகங்களையும் எடுத்து தம்பிக்கு வைக்க வேண்டும் என்றும், தான் மறைந்தாலும் தம்பியின் உடலில் உயிர் வாழ வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில், நில மோசடியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது கொரட்டூர் போலீஸார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in