அடக்கடவுளே.. “பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் காரை நோக்கி பாய்ந்த தோட்டாக்கள்.. ஆனா..” ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே.. “பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் காரை நோக்கி பாய்ந்த தோட்டாக்கள்.. ஆனா..” ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், அவரது தீவிர ரசிகரும், பொழுதுபோக்கு பதிவருமான உமேஷ் சௌஹான் மார்பில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை ஜூஹு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டைகர் ஷெராஃப் கால்பந்து விளையாடிவிட்டுத் திரும்பியபோது, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது, நடிகரைப் படம் பிடிக்க காரின் அருகே நின்றுகொண்டிருந்த உமேஷ் சௌஹானின் மார்பில் தோட்டா பாய்ந்ததுடன், டைகர் ஷெராஃப்பின் கார் ஓட்டுநரான பிர்தௌஸும் காயமடைந்தார். இந்த ஆபத்தான தாக்குதலில் இருந்து நடிகர் டைகர் ஷெராஃப் நூலிழையில் உயிர் தப்பினார்.

மும்பையில் சோப்புத்தூள் விற்கும் தொழில் செய்து கொண்டே பகுதிநேரமாக யூடியூப் பதிவுகளை வெளியிட்டு வந்த உமேஷின் நிலைமை தற்பொழுது கவலைக்கிடமாக உள்ளது. அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில், குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த உமேஷ் மும்பை கே.இ.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரலில் சிக்கியிருந்த தோட்டா வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் முழுவதும் நடிகர் டைகர் ஷெராஃப் பக்கமே இருந்த நிலையில், படுகாயமடைந்த உமேஷின் குடும்ப நிலையை அறிந்து டைகர் ஷெராஃப்பின் தாயார் ஆயிஷா ஷெராஃப் நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து தங்களது முழு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் உமேஷின் உடல்நிலை குறித்து விசாரித்து, தாங்கள் உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in