“20 பெண்களை வேட்டையாடிய ‘சயனைடு மோகன்’..” கருத்தடை மாத்திரை என்று கூறி கொடுத்த கொடூரம்.. பேருந்து நிலையக் கழிவறைகளில் அடுத்தடுத்து சடலங்கள்.. நடுக்கமுற வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“20 பெண்களை வேட்டையாடிய ‘சயனைடு மோகன்’..” கருத்தடை மாத்திரை என்று கூறி கொடுத்த கொடூரம்.. பேருந்து நிலையக் கழிவறைகளில் அடுத்தடுத்து சடலங்கள்.. நடுக்கமுற வைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடகாவில் வரதட்சணை கேட்காமல் ஏழைப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பின்னர் அவர்களுக்குக் கருத்தடை மாத்திரை என்று கூறி சயனைடு விஷம் கொடுத்து 20 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்த ‘சயனைடு மோகன்’ என்ற தொடர் கொலைகாரனின் திகிலூட்டும் உண்மைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2003 முதல் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மைசூரு, மடிகேரி, ஹாசன் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பேருந்து நிலையக் கழிவறைகளில் இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். அவர்களின் உடலில் எவ்வித காயங்களும் இல்லாததாலும், உடற்கூறாய்வில் விஷம் குடித்ததற்கான அறிகுறிகள் இருந்ததாலும், ஆரம்பத்தில் உள்ளூர் போலீசார் இவற்றைத் தனித்தனியான தற்கொலை வழக்குகளாகக் கருதி கோப்புகளை மூடினர்.

இருப்பினும், பன்ட்வால் பகுதியைச் சேர்ந்த 46 வயதான உடற்கல்வி ஆசிரியர் மோகன் குமார் என்பவரே இந்தத் திட்டமிட்ட கொலைகளுக்குப் பின்னால் இருந்த கொடூரன் என்பதைப் போலீசார் கண்டறிந்தனர். சமூகத்தில் வரதட்சணைக் கொடுமையால் திருமணம் ஆகாமல் தவிக்கும் ஏழைப் பெண்களைக் குறிவைத்த மோகன், தன்னை ஒரு அரசு அதிகாரி என்றும், வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்யத் தயார் என்றும் கூறி பெண்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். பின்னர் அவர்களைத் தன்னுடன் வரவழைத்து, நகைகளை லாட்ஜ் அறையிலேயே வைக்கச் சொல்லிவிட்டு, கோவிலுக்குச் செல்லும் வழியில் பேருந்து நிலையக் கழிவறைக்கு வெளியே வைத்து, கர்ப்பம் தரிக்காமல் இருக்க “கருத்தடை மாத்திரை” என்று கூறி சயனைடு மாத்திரையைக் கொடுத்துள்ளார். அதை உட்கொண்ட சில நொடிகளிலேயே பெண்கள் கழிவறைக்குள்ளேயே சுருண்டு விழுந்து உயிரிழக்க, லாட்ஜில் இருந்த நகைகளுடன் அவன் தப்பியோடியுள்ளான்.

Advertisement

இந்த 5 ஆண்டு கால கொடூரக் கொலை வேட்டை கடந்த 2009 அக்டோபரில் முடிவுக்கு வந்தது. அனிதா என்ற 22 வயது பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கொடுத்த மொபைல் போன் அழைப்பு விவரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மங்களூரு அருகே மோகன் குமாரைக் கைது செய்தனர். அவனது வீட்டில் இருந்து சயனைடு பவுடர், நூற்றுக்கணக்கான போலி சிம் கார்டுகள் மற்றும் அடகு வைக்கப்பட்ட நகை ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவன் கர்நாககா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 20 பெண்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டான். 2013 முதல் 2020 வரை நடந்த நீதிமன்ற விசாரணைகளின் முடிவில், அவனுக்கு 5 மரண தண்டனைகள் பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in