“நான் சாகப் போறேன்…” கதறிய 10-ஆம் வகுப்பு மாணவி.. காப்பற்ற வேண்டிய காவலரே செய்த கொடூர காமவேட்டை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் சாகப் போறேன்…” கதறிய 10-ஆம் வகுப்பு மாணவி.. காப்பற்ற வேண்டிய காவலரே செய்த கொடூர காமவேட்டை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், காவலர் ஒருவர் மீது பாலியல் சுரண்டல் மற்றும் பிளாக்மெயில் செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். காஹ்மர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மோஹித் யாதவ் என்ற காவலர், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி பொறியில் வீழ்த்தியதாக அந்த மாணவர் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, ஆடைகள் இன்றி புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அந்தப் படங்களை வைத்துத் தன்னைத் தொடர்ந்து பிளாக்மெயில் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அந்தக் காவலர் தன்னை மற்றவர்களுடன் உடலுறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும், இதனால் இப்போது தனது குடும்பத்தினரும் தனக்கு ஆதரவாக இல்லை என்றும், தான் வாழ விரும்பாமல் சாக விரும்புவதாகவும் அந்த மாணவி வேதனையுடன் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பாகத் தனது புகாரை வீடியோ ஆதாரத்துடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து காசிப்பூர் கிராமப்புற எஸ்பி அதுல் குமார் சோன்கர் கூறுகையில், இப்புகார் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான குற்றம் சாட்டப்பட்ட காவலர் மோஹித் யாதவ், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தன் மீது திட்டமிட்டுப் பழிசுமத்தவும், தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்கவும் முயற்சி நடப்பதாக அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in