எழுதி வச்சிக்கோங்க.. இனி நாங்க இல்லாம திமுகவால் ஜெயிக்கவே முடியாது… அமைச்சர் விஸ்வநாதன் பகிரங்க சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எழுதி வச்சிக்கோங்க.. இனி நாங்க இல்லாம திமுகவால் ஜெயிக்கவே முடியாது… அமைச்சர் விஸ்வநாதன் பகிரங்க சவால்..!!

Published

on

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… காங்கிரஸ் கட்சி இல்லாமல் தி.மு.கவால் இனி ஜெயிக்கவே முடியாது” என்று அமைச்சர் விஸ்வநாதன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் கற்றுத் தரும் அளவுக்கு தி.மு.க ஒன்றும் பெரிய கட்சி கிடையாது என்றும், 143 ஆண்டுகால பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட தங்களுக்குத் துரோகம் செய்தது யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் சாடினார்.

கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதே, தி.மு.கவினர் பா.ஜ.கவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக விஸ்வநாதன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், தி.மு.க தனது சுயலாபத்திற்காக அ.தி.மு.கவுடன் சேர்ந்துகூட ஆட்சியை அமைக்கத் திட்டமிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தங்களை விமர்சிப்பதற்கு முன்னால் தி.மு.க தனது அரசியல் செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். காங்கிரஸ் தயவில்லாமல் தி.மு.க இனி எப்போதும் தமிழ்நாட்டில் கரை சேரவே முடியாது என்பது மு.க.ஸ்டாலினுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் சாடினார்.

Advertisement

2026 தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களின் பின்னணியில், குறிப்பாக காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க-காங்கிரஸ் இடையேயான 22 ஆண்டுகால கூட்டணி முறிவடைந்த நிலையில், “காங்கிரஸுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என மு.க.ஸ்டாலின் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைச்சர் விஸ்வநாதனின் இந்த ஆவேசமான தாக்குதல் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in