செஞ்சி சிறுமி மாயம்… 10 நாட்களாகியும் துப்பில்லை ஆனால் – சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் திருப்பங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செஞ்சி சிறுமி மாயம்… 10 நாட்களாகியும் துப்பில்லை ஆனால் – சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் திருப்பங்கள்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி (ஹேமலதா) கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது மாயம். பிறந்தநாள் கொண்டாடிய அன்றைய இரவே சிறுமி காணாமல் போனதால், திட்டமிட்ட சதி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ,

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), மோப்ப நாய்கள் உதவியுடன் ஏரிகள், புதர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள், 600-க்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் மற்றும் டவர் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களிடம் பல கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், 10 நாட்கள் கடந்தும் சிறுமியைப் பற்றிய எந்தவொரு துப்பும் கிடைக்காமல் உள்ளூர் போலீஸ் திணறியது.

Advertisement

இதையடுத்து, தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணையை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் வழக்காக இதனைப் பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், டி.எஸ்.பி கீதா தலைமையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in