அய்யயோ..! பால் குடிச்சிட்டு தூங்கிய குடும்பம்.. நள்ளிரவில் 5 வயது சிறுவன் பலி… 2 பேர் மருத்துவமனையில் அனுமதி… நடந்தது என்ன..? திடுக்கிடும் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யயோ..! பால் குடிச்சிட்டு தூங்கிய குடும்பம்.. நள்ளிரவில் 5 வயது சிறுவன் பலி… 2 பேர் மருத்துவமனையில் அனுமதி… நடந்தது என்ன..? திடுக்கிடும் சம்பவம்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கைராஸ் கேட் எல்லைக்குட்பட்ட கந்தாரி கடி பகுதியில், நேற்று இரவு பால் குடித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி ஏற்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நள்ளிரவு 1:30 மணியளவில் 5 வயது சிறுவன் அன்ஷு பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும், ஆபத்தான நிலையில் இருந்த தந்தை தானிஷ் (26) மற்றும் அவரது மூத்த மகன் சோஹைப் (6) ஆகிய இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அலிகார் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த அந்தக் குடும்பம், வெறும் 8 நாட்களுக்கு முன்புதான் அப்பகுதியில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

ஒரே நேரத்தில் பால் குடித்த 3 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பாலில் ஏதேனும் விஷப்பொருள் அல்லது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள காவல் துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in