“செம ஐடியா..! இனி ஹாஸ்டலில் தற்கொலை பண்ணவே முடியாது..” 10 கிலோ எடை பட்டாலே சாயும்… மாணவர்களின் உயிரை காப்பாற்ற வந்த புதிய ஸ்மார்ட் ஃபேன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செம ஐடியா..! இனி ஹாஸ்டலில் தற்கொலை பண்ணவே முடியாது..” 10 கிலோ எடை பட்டாலே சாயும்… மாணவர்களின் உயிரை காப்பாற்ற வந்த புதிய ஸ்மார்ட் ஃபேன்..!!

Published

on

குஜராத் மாநிலத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. மாணவர் விடுதிகளில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மின்விசிறிகளில், அதிக எடை ஏற்படும்போது செயல்படும் வகையில் சிறப்பு ஸ்பிரிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 10 கிலோவுக்கும் அதிகமான எடை கொடுக்கப்படும்போது, ஸ்பிரிங் விரிவடைந்து மின்விசிறி கீழ்நோக்கிச் சாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மின் இணைப்பும் துண்டிக்கப்படும்.

Advertisement

மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், விடுதிகளில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் உயிரைப் பாதுகாப்பதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in