செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்..! குடும்பத்தினருக்கு தொடர்பா..? காவல் நிலையத்தில் தாயாரை வைத்து தீவிர விசாரணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்..! குடும்பத்தினருக்கு தொடர்பா..? காவல் நிலையத்தில் தாயாரை வைத்து தீவிர விசாரணை..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர்கள் வடிவேலு- பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவளுக்கு கடந்த 11-ந் தேதி அவளது பெற்றோர், உறவினர்கள் பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் சிறுமி ஹேமலதா படுத்து தூங்கினாள். மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேம் லதாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர், உறவினர்கள் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாய் பவானி, சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படையினர், ஆலம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடியும், சிறுமி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த 21-ந் தேதி இரவு மாற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, பாலமுருகன் மற்றும் போலீசார், ஆலம்பூண்டி கிராமத்திற்கு 22-ந்தேதி காலையிலே நேரில் சென்று தங்கள் விசாரணையை தொடங்கினர். கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில் நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இறங்கினர். ஏற்கனவே சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சத்தியமங்கலம் போலீசாரிடம் இருந்து பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், அந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதிலிருந்து கூடுதல் தகவல்களை சேகரிப்பதற்காக அவர்கள் மீண்டும் முதலில் இருந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisement

சிறுமி காணாமல் போன சம்பவத்தில் அவளது தாய், தந்தை, பாட்டி ஆகியோருக்கு தொடர்பு இருக்கிறதா? அவர்களுக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடந்ததா? அல்லது தெரியாமல் நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் சிறுமியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லை என்றால் அதை உறுதி செய்த பின்னரே நாங்கள் அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்குவோம் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். சிறுமியின் தாயார் பவானியிடம் நேற்றும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in