LATEST NEWS
சற்றுமுன் வங்கக் கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல்.. வானிலை மையம் அலெர்ட்..!!
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ (Arnab) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயலானது மேலும் தீவிரமடைந்து, ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே அதி தீவிர புயலாக வரும் அக்டோபர் 28ஆம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
