LATEST NEWS
ஐயோ கொடுமையே..! விளையாடச் சென்ற 3 வயது குழந்தை மாயம்.. தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தபோது உறைந்துபோன தருணம்!.. கதறித் துடிக்கும் பெற்றோர்..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சனிகாவ் பம்பா பகுதியில் வசிக்கும் முகமது ரபீக் என்பவரின் 3 வயது மகன் நிஹால், தனது வீட்டில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதறிப்போன குடும்பத்தினர், அக்கம் பக்கத்து தெருக்களிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிரமாகத் தேடினர். சுமார் ஒன்றரை மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள ஒரு வாகன கழுவும் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் விழுந்துவிட்டதாக அங்கிருந்த குழந்தைகள் தெரிவித்தனர்.
உடனே குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் சேர்ந்து சிறுவன் நிஹாலைத் தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியே மீட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மூன்று சகோதரர்களில் இளையவனான நிஹாலின் அகால மரணம் அந்தக் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தியது. விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சில நிமிடங்களில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களைக் கண் கலங்கச் செய்தது.
சம்பவம் நடந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மாலை 7 மணியளவில் காவல்துறையினருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாரும் தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இருப்பினும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்றும், குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர். குடும்பத்தினரின் நிலைப்பாடு மற்றும் புகாரின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
