கைதுடன் முடியவில்லை ஆட்டம்.. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை வளைத்துப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போட்ட மெகா பிளான்.. அடுத்து காத்திருக்கும் செக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கைதுடன் முடியவில்லை ஆட்டம்.. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை வளைத்துப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போட்ட மெகா பிளான்.. அடுத்து காத்திருக்கும் செக்..!!

Published

on

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும் திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் பி.டி.அரசகுமார் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தி, கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணையும் நடத்தினர்.

இதனிடையே, இந்த வழக்கைத் ரத்து செய்யக்கோரியும், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரியும் அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கவும், தரமான உணவு வழங்கவும், தேவைப்பட்டால் மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில், இந்த ஊழல் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும், தலைமறைவாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் குறித்தும் அவரிடம் விசாரிக்கப்படவுள்ளது. இதற்காக ஓரிரு நாட்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in