LATEST NEWS
“கோவத்துல பேசிட்டேன்” இதுக்கும் அமைச்சர் பர்வேஸ் சாருக்கும் எந் தொடர்பும் இல்லை… போலீசாரை மிரட்டி கைதான இளம்பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ..!!
மழைநீர் தெறித்த விவகாரத்தில் அரசுப் பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்டதுடன், காவல்துறையினரையும் மிரட்டிய இளம்பெண் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமக்கும் அமைச்சர் பர்வேஸ் சாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டதாகவும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். முன்னதாக, சாலையில் சென்றபோது அரசுப் பேருந்து அடித்த மழைநீர் தன் மீது தெறித்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், பேருந்தை நடுவழியில் மறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவத்தின்போது, சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்ய முயன்ற காவல்துறையினரையும், தனக்கு ஆளுங்கட்சி அமைச்சர் பர்வேஸ் சாரைத் தெரியும் என அவரது பெயரைப் பயன்படுத்தி அந்தப் பெண் மிரட்டல் விடுத்தார். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இந்தத் தெளிவுபடுத்தல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
