LATEST NEWS
என் ராஜினாமா குறித்து வதந்திகளைப் பரப்புபவர்கள்.. மன்னிப்பு கேட்காவிட்டால் கோர்ட் ஏறுவேன்..அதிரடி எச்சரிக்கை விடுத்த எல். முருகன்..!!
மத்திய இணையமைச்சர் மற்றும் மாநிலங்களவை எம்பி பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்த எல். முருகன், தனது ராஜினாமா குறித்து இணையங்களில் பரவி வரும் பல்வேறு அவதூறான கருத்துக்களுக்கும் வதந்திகளுக்கும் தற்பொழுது திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டு வரை எம்பி பதவிக்காலம் இருந்தபோதிலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் பரப்பும் தேவையற்ற கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என்று அவர் சாடியுள்ளார். தான் ஒரு ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, பிரதமரின் நம்பிக்கையைப் பெற்று ஐந்து ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றியதை நினைவு கூர்ந்துள்ளார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து பொதுமக்களிடையே குழப்பத்தை உருவாக்குவதே இந்த அவதூறுகளின் ஒரே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தெருவிற்கும் சென்று முழு நேரமாக தேர்தல் பணியாற்ற உள்ளதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார். மேலும், ஆதாரமின்றி இதுபோன்ற இழிவான பிரசாரங்களைப் பரப்புபவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் மீது நீதிமன்றங்களில் குற்றவியல் மற்றும் உரிமையியல் ரீதியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல். முருகன் எச்சரித்துள்ளார்.
