LATEST NEWS
“சொந்த ஊருக்குப் போறவங்களுக்கு ஜாக்பாட்..” 2000 சிறப்பு பஸ்கள் ரெடி..! TNSTC போட்ட அதிரடி பிளான்… உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..!!
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 2,000-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இதர ஊர்களுக்கு வரும் 30-ம் தேதி 690 சிறப்பு பேருந்துகளும், 31-ம் தேதி 505 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
அதேபோல, அதே நாள்களில் சென்னை கோயம்பேட்டில் இருந்து இதர ஊர்களுக்கு 95 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், வார விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்கு வசதியாக, நவம்பர் 1-ம் தேதி இதர ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்குத் திரும்ப 690 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
