CRIME
நடுரோட்டில் மோதிய கள்ளக்காத ஜோடி.. இடையில் புகுந்த மாமனாருக்கு நேர்ந்த சோகம்.. ரகசியமாக நடந்த ‘அந்த’ காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
திருப்பத்தூர் கந்திலி அருகே டி. வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான நந்தியப்பன் (50) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறு, அதைத் தட்டிக்கேட்ட முதியவர் செல்வத்தின் (60) கொடூர மரணத்தில் முடிவடைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி ரோஜாவிற்கும் நந்தியப்பனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை ரோஜாவின் சின்ன மாமனாரான செல்வம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தியப்பன், இரும்பு ராடால் முதியவர் செல்வத்தை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், கடந்த 25-ஆம் தேதி வீட்டில் திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்வத்தின் மரணத்தைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் ரகசியமாக அடக்கம் செய்ய முயன்றபோது, அப்பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதியவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கந்திலி போலீசார், தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் நந்தியப்பனை அதிரடியாகக் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
