அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்: ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளிகள்… ஆடிப்போன எடப்பாடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்: ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளிகள்… ஆடிப்போன எடப்பாடி..!!

Published

on

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவில் திடீர் திருப்பமாக, முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் அதிமுக மாணவரணி நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மதுரைக்கு வருகை தந்துள்ள திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நிர்வாகிகள், அவருக்கு சால்வை அணிவித்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பின் போது திமுகவின் முக்கிய உள்ளூர் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Advertisement

அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் செயல்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே இவர்கள் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் பகுதியில் நீண்ட காலமாக அதிமுகவின் தூண்களாக விளங்கிய நிர்வாகிகள் திடீரென திமுகவில் ஐக்கியமானது, அப்பகுதி அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in