நெஞ்சை உலுக்கும் விசித்திரம்..! மீன்பிடிக்க சென்ற சென்றபோது நடந்த சம்பவம்… தலைவலியுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எக்ஸ்ரேவில் பார்த்து அலறிய மருத்துவர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை உலுக்கும் விசித்திரம்..! மீன்பிடிக்க சென்ற சென்றபோது நடந்த சம்பவம்… தலைவலியுடன் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எக்ஸ்ரேவில் பார்த்து அலறிய மருத்துவர்கள்..!!

Published

on

ரஷ்யாவில் கடுமையான தலைவலி மற்றும் கண்பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த 42 வயது நபரான மாக்சிம் என்பவரின் கண்ணுக்குள் செடி ஒன்று வளர்ந்திருந்த விசித்திரமான சம்பவம் மருத்துவர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாக்சிம் சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மரத்தின் கிளை ஒன்று அவரது கண்ணில் பலமாக மோதி காயத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது மரக் கிளையில் இருந்த சிறிய விதை ஒன்று அவரது கண்ணுக்குள் சென்று சிக்கியதே இந்த விசித்திரப் பிரச்சனைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

அந்த விதை அவரது கண்ணின் வெள்ளைப்பகுதியில் (Sclera) சுமார் 3 மில்லி மீட்டர் ஆழத்திற்குச் சென்று, அங்கிருந்த ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வேர்விட்டு முளைக்கத் தொடங்கியுள்ளது. விதை மெல்ல வளர்ந்து செடியாக மாறியதால், அவருக்குத் தொடர் தலைவலியும், பார்வுக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த போதுதான், அவரது கண்ணுக்குள் ஒரு பச்சை நிறச் செடி வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து வியப்படைந்துள்ளனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, மாக்சிமிற்கு உடனடியாக அதிநவீன மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது கண்ணில் வேர்விட்டு வளர்ந்திருந்த செடி பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிக்கலான சிகிச்சைக்குப் பின் அவரது தலைவலி குணமாகி, கண் பார்வையும் சீராகியுள்ளது. தற்போது அவர் எந்தவித ஆபத்துகளுமின்றி முற்றிலும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in