LATEST NEWS
“அந்த சாதாரண சப்பாத்தியைச் சாப்பிட முடியல..அதனால..” அன்பில் மகேஷ் தரப்பு விடுத்த புதிய கோரிக்கை.. பரபரப்பு பின்னணி..!!
ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷ், ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவின் விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர், சிறையில் அவருக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சாதாரண சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதால் அவரது உடல் எடை கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் பரபரப்பு வாதத்தை முன்வைத்தார்.
சிறை உணவைச் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அன்பில் மகேஷ், தனக்கு வீட்டில் சமைக்கப்படும் உணவைச் சிறையில் வழங்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். லஞ்ச வழக்கு விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறை உணவு குறித்தான அவரது இந்த கோரிக்கையும், நீதிமன்ற ஆஜர்படுத்தலும் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
