LATEST NEWS
இடைத்தேர்தல் குறித்து சென்ற ரகசிய ரிப்போர்ட்.. 3 தொகுதிகளில் சறுக்கல்… 2 தொகுதிகளில் சாதகம்.. களத்தில் இறங்கி அதிரடி காட்டும் CM விஜய்..!!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 5 தொகுதிகளின் கள நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு உளவுத்துறை மற்றும் தேர்தல் வியூகக் குழுவினர் அதிர்ச்சி அறிக்கை அனுப்பியுள்ளனர். அந்த ரகசிய அறிக்கையில், கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய மூன்று தொகுதிகளில் தவெக வெற்றி பெறுவது தற்போதைய சூழலில் மிகவும் கடினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திருச்சி கிழக்கு மற்றும் விராலிமலை ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் கட்சிக்குச் சாதகமான அலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் கணக்குகளையும் பின்னடைவுகளையும் சரிசெய்யும் நோக்கில் தான், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக விசிட் அடித்து களப்பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் பலவீனமாக உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அங்குள்ள நிர்வாகிகளை மாற்றுவது மற்றும் தேர்தல் உத்திகளை மாற்றி அமைப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
