செஞ்சி சிறுமி மாயம்: விடிய விடிய எரிந்த செங்கல் சூளையால் எழுந்த புது சந்தேகம்.. 600 செல்போன் அழைப்புகள் ஆய்வு.. சி.பி.சி.ஐ.டி அதிரடி..!! – cinefeeds
Connect with us

CRIME

செஞ்சி சிறுமி மாயம்: விடிய விடிய எரிந்த செங்கல் சூளையால் எழுந்த புது சந்தேகம்.. 600 செல்போன் அழைப்புகள் ஆய்வு.. சி.பி.சி.ஐ.டி அதிரடி..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணியில், 600 பேரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கூலித் தொழிலாளி வடிவேலு-பவானி தம்பதியினரின் மகளான அச்சிறுமி கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி மாயமானார். மோப்ப நாய்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமி மாயமாகி 20 நாட்களைக் கடந்த நிலையிலும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், போலீசார் தங்களது விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர். சிறுமி காணாமல் போன ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் கோபுரங்களின் (டவர்கள்) தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 11-ஆம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பதிவான 600 பேரின் செல்போன் எண்களைக் கொண்டு, அன்று இரவு அங்கு நடமாடிய மர்ம நபர்கள் குறித்துத் தனித்தனியாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

இதற்கிடையே, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், கோவில் பூசாரி மற்றும் அப்பகுதியில் உள்ள குற்றவாளிகள் பலரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமி காணாமல் போன அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மையமாக வைத்துச் செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்த பணியாளர்கள் உட்பட 5 பேரிடமும் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in